சினிமா செய்திகள்
பிக்பாஸ் வீட்டிலும் தண்ணீர் பற்றாக்குறை; முதல் நாளே பஞ்சாயத்து..!

பிக்பாஸ் சீசன் 3 நேற்று முதல் தொடங்கியது. இன்று பிக்பாஸ் வீட்டில் சென்றுள்ளவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அந்த ப்ரோமோவில் தண்ணீர், எரிவாயு போன்றவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவற்றுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று பிக்பாஸ் கூறுகிறார்.
உடனே வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அதை கை தட்டி வரவேற்கிறார்கள். உடனே பாத்திமா பாபு, “பிக் பாஸ் வரலாற்றிலேயே தண்ணீர் சிக்கனமாகப் பயன்படுத்தக் கூறியிருப்பது அவல நிலை. அதை கைதட்டி வரவேற்க வேண்டியதில்லை” என்கிறார்.
அதற்கு மறுப்பு தெரிவிக்கும் சேரன், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை வரவேற்கும் விதமாகதான் அதைக் கைத்தட்டி அதை வரவேற்றோம்” என்று கூறுகிறார்.
மேலும் எல்லா முறையும் பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும். ஆனால் இந்த முறை நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லை.
தமிழ்நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளத்தில் தண்ணீர் இருந்தால் எங்குச் சர்ச்சையாகிவிடுமோ என்று பிக்பாஸ் இப்படி செய்துள்ளாரோ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.