சினிமா செய்திகள்
தர்ஷனை இயக்கும் சேரன்!

பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியிட்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள தர்ஷன், பிக்பாஸில் இறுதி நாள் வரை முன்னேற முடியாமல் போனாலும், வெளியில் வந்த இரண்டு நாட்களில் முதல் பட வாய்ப்பை பெற்றுள்ளார்.
கவினை வைத்து நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தைத் தயாரித்த லிப்ரா ப்ரோடக்ஷன் நிறுவனம் தர்ஷனை வைத்து படம் எடுக்க உள்ளது.
இந்த படத்தை சேரன் இயக்குவார் என்று லிப்ரா ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் டிவிட்டர் மூலம் தெரிகிறது.
இது தொடர்பாக லிப்ரா நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது. “டியர் தர்ஷன், இறுதியாக உங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது. ஆனால் கோலிவுட்டில் உங்கள் ஆட்டம் தொடங்குகிறது. லிப்ரா ப்ரோடக்ஷனின் வாழ்த்துக்கள் என கூறி, இயக்குநர் சேரன், நடிகை ஷனன் ஷெட்டி உள்ளிட்டவர்கள்” டேக் செய்துள்ளனர்.


















