சினிமா செய்திகள்
ரகுல் ப்ரீத் சிங்குக்கு இணையாக மோதும் பிரியா வாரியர்!

தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து வரும் ரகுல் ப்ரீத் சிங், அண்மையில் அஜய்தேவ்கனுடன் நடித்து வெளியான பாலிவுட் படத்திலும் வெற்றியை ருசி பார்த்தார்.
ஆனால், தமிழில் வெளியான ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே படங்கள் ரகுல் ப்ரீத் சிங்குக்கு படுதோல்வி படங்களாகவே அமைந்து விட்டன.
இந்நிலையில், மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது முழு கவனத்தையும் ரகுல் திருப்பியுள்ளார்.
சந்திரசேகர ரெட்டி என்பவர் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நிதின் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த படத்தில், ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இணையாக இரண்டாவது நாயகி ரோலில் ஒரு அடார் லவ் மூலம் பிரபலமான பிரியா வாரியர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
பிரியா வாரியருக்கும் இதுவரை அவர் நடித்த படங்கள் பெரிதாக கை கொடுக்கவில்லை. அதனால், இந்த படத்தில் இருவரும் போட்டி போட்டு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.















