தமிழ்நாடு
படித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு: ரூ.75 லட்சம் வரை கடன் – NEEDS திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்!

திருச்சி:
தமிழ்நாடு அரசின் NEEDS (New Entrepreneur cum Enterprise Development Scheme) திட்டத்தின் கீழ், படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் ரூ.75 லட்சம் வரை மானியத்துடன் கூடிய தொழில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
🔹 NEEDS திட்டம் என்ன?
புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் NEEDS திட்டம், மாவட்ட தொழில் மையங்கள் மூலம் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் தேர்வான நபர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளித்து, வங்கிகள் மூலமாக மாநியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படும்.
🔹 தொழில் கடனுக்கான நிபந்தனைகள்:
திட்ட மதிப்பீடு குறைந்தது ₹10 லட்சம் முதல் அதிகபட்சம் ₹500 லட்சம் வரை இருக்க வேண்டும்.
அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் (மாசு ஏற்படுத்தும் தொழில்கள் தவிர) துவங்க அனுமதி.
தொழில் திட்ட மதிப்பீட்டில் 25% வரை மானியம் (அதிகபட்சம் ₹75 லட்சம் வரை) வழங்கப்படும்.
3% வட்டி மானியமும் வழங்கப்படும்.
🔹 யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, இளங்கலை, முதுநிலை பட்டம்.
வயது: 21 முதல் 45 வயதுக்குள்.
சிறப்பு பிரிவினருக்கு (மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர்) வயது வரம்பு 55 வரை.
கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் வசிக்க வேண்டும்.
🔹 பங்கு நிதி (Promoter Contribution):
பொதுப்பிரிவினருக்கு: திட்ட மதிப்பீட்டில் 10%
சிறப்பு பிரிவினருக்கு: 5% மட்டுமே
🔹 எங்கே விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவுசெய்யலாம்.






