வேலைவாய்ப்பு
தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்: கோவை மாநகராட்சியில் மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு!

கோவை மாநகராட்சியில் சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு – தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும்!
கோயம்புத்தூர் மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவின் கீழ் இயங்கும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர ஆய்வகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ஆட்சேர்ப்பு 6 மாத கால தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நடைபெறுகிறது. பல்வேறு பதவிகளுக்கான தகுதிகளும், சம்பள விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
பதவிகள் மற்றும் தகுதிகள்:
🔹 நகர சுகாதார செவிலியர் (Urban Health Nurse)
தகுதி: ANM / DGNM / B.Sc Nursing
காலியிடங்கள்: 25
சம்பளம்: ரூ.14,000
வயது வரம்பு: 40
🔹 செவிலியர் (Staff Nurse)
தகுதி: DGNM / B.Sc Nursing
காலியிடங்கள்: 2
சம்பளம்: ரூ.18,000
வயது வரம்பு: 35
🔹 மருந்தாளுநர் (Pharmacist)
தகுதி: D.Pharm / B.Pharm
சம்பளம்: ரூ.15,000
வயது வரம்பு: 35
🔹 நுண்ணுயிரியலாளர் (Microbiologist)
தகுதி: MSc Medical Microbiology / MBBS with PG/Diploma in relevant fields
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.25,000 – ரூ.40,000
வயது வரம்பு: 35
🔹 ஆய்வக நுட்புநர் (Lab Technician)
தகுதி: Diploma in Medical Laboratory Technician
காலியிடங்கள்: 3
சம்பளம்: ரூ.13,000
வயது வரம்பு: 35
🔹 பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker)
தகுதி: 8ஆம் வகுப்பு, தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காலியிடங்கள்: 3
சம்பளம்: ₹8,500
வயது வரம்பு: 35
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தினை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ / பதிவு தபால் / விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்:
முகவரி:
மாநகரநல அலுவலர்,
பொது சுகாதாரப்பிரிவு,
மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன்ஹால்),
1109, பெரிய கடைவீதி,
கோயம்புத்தூர் – 641001.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025














