வணிகம்
PF உறுப்பினர்களுக்கு மாபெரும் செய்தி: EPS ஓய்வூதியம் ரூ.3000 ஆக உயர வாய்ப்பு!

இபிஎஃப் (EPF) மற்றும் EPS திட்டத்தில் பதிவாகியுள்ள ஊழியர்களுக்கு வருகிற நாட்களில் ஓர் இனிய செய்தி வரப்போகிறது. EPS திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1000-இல் இருந்து ரூ.3000-க்கு உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது மூன்று மடங்கு உயர்வாகும், எனவே இது நாடாளுமன்றம், நிதி அமைச்சகம் மற்றும் தொழிலாளர் துறையில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
2014-இல் ரூ.250-இல் இருந்து ரூ.1000-க்கு உயர்த்தப்பட்ட EPS ஓய்வூதியம், தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்படவிருக்கிறது. மத்திய அரசு மற்றும் EPFO இந்த கோரிக்கையை பரிசீலித்து வருகிறது. தற்போது EPS திட்டத்தின் செயல்பாடுகள் மூன்றாம் தரப்பு நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இது திட்டத்தின் நியாயத்தையும், ஓய்வூதியதாரர்களின் நலனையும் உறுதி செய்யும்.
EPF-ஐ சேமித்து வரும் ஊழியர்களிடம் மாதம் 12% வேதனையிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. நிறுவனமும் அதே அளவு தொகையை பணிவைக்கும். இதில் ஒரு பகுதி EPS-க்கு செல்கிறது, இதில் ஓய்வு பெற்ற பின் மாதா மாதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
சுமார் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் EPS-க்கு கீழ் உள்ளனர். இதில் 36.6 லட்சம் பேர் குறைந்தபட்சமாக ரூ.1000 மாத ஓய்வூதியம் மட்டுமே பெறுகின்றனர். இந்நிலையில், இந்த தொகையை ரூ.3000 ஆக உயர்த்தும் திட்டம் EPS நிதி நிலையைப் பொறுத்த வரை சாத்தியமானதாக இருக்கிறது. EPS-இன் மொத்த நிதிக் காப்பகம் ரூ.8 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளதால், நிதிச் சுமை உருவாக வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.
2025 பட்ஜெட்டிற்கு முன்னதாகவே EPS ஓய்வூதியத்தை ₹7500-க்கு உயர்த்த வேண்டும் என ஓய்வூதியதாரர்கள் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் தற்போது ₹3000 உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை தான் நடைமுறையில் உள்ளது. EPS-இன் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ-7500 என்பதால், ரூ.9000 உயர்வுக்கான வதந்திகள் உண்மையல்ல. இது நடைமுறைக்கு வர, ஊதிய உச்சவரம்பான ரூ.15,000-ஐ உயர்த்த அரசாங்கம் முன்வர வேண்டும்.
இந்த முயற்சி செயல்படும்வரை, குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வுக்காக எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே உள்ளது. பணவீக்கம் உயரும் சூழ்நிலையில், ரூ.1000 ஓய்வூதியம் நிஜ வாழ்க்கைச் செலவுகளுக்கு போதவில்லை என்பதும் வெளிப்படை.
