சினிமா செய்திகள்
ஆஸ்கர் விருது 2023 வழங்கும் விழாவில் தீபிகா படுகோனே!

நடிகை தீபிகா படுகோனே ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் இடம்பெற்றுள்ளார்.
பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோனே நடிப்பில் சமீபத்தில் ‘பதான்’ திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்கள் படத்திற்கு வந்தாலும் வசூல் ரீதியாக 1000 கோடியை வசூலித்து சாதனை படைத்தது திரைப்படம்.
இந்த நிலையில், நடிகை தீபிகா படுகோனே இந்த வருடத்திற்கான ஆஸ்கர் விருதுகளை வழங்குபவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். 95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்த மாதம் 12ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில்தான் விருதுகள் வழங்குபவர்கள் பட்டியலில் தீபிகா இடம்பெற்றுள்ளார்.
இதனை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். டுவைன் ராக் ஜான்சன், ரிஸ் அகமது, எமி பிளண்ட் உள்ளிட்ட பல நடிகர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது, சமீபத்தில் நடைபெற்ற பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான பரிசுக்கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியிலும் தீபிகா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.