Connect with us

இந்தியா

பெங்களுரு வட்ட இரயில் பாதை திட்டத்தில் 14 கி.மீ.துாரம் தமிழ்நாடு வழியாக செயல்படுத்துவதை கைவிட வேண்டும்.

Published

on

பெங்களுரு வட்ட இரயில்பாதை 287 கி.மீ.துாரத்தில் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக ரூ.23000 கோடி மதிப்பில்  போடப்பட உள்ளது. இந்த பாதை நிதுவண்டா, வத்தரஹல்லி,  தேவனஹல்லி, தொட்டபெல்லாபூர், மாலுார், ஹல்லலிகே, ஹஜ்ஜாலா மற்றும் சோலுார் ஆகிய நகரங்களை இணைக்கும் விதத்தில் போடப்பட உள்ளது. இதில் தேவனஹல்லி பிரதான பெரிய இரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. நில ஆர்ஜித நடவடிக்கைகளை மாநில அரசும் கட்டுமானங்களை ஒன்றிய அரசும் மேற்கொள்ள உள்ளன. விரிவான திட்ட அறிக்கை முடியும் தறுவாயில் உள்ளது. பெங்களுருவைச் சுற்றி உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக அமைய உள்ள இது புறநகர் ரயில் சேவைக்கும் இணைப்பாக செயல்படும்.  ஏற்கனவே 7.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தொடங்கி விட்டன.

இந்த பாதையில் 14 கி.மீ.துாரம் தமிழ்நாடு வழியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், 1035 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்படும் நிலையுள்ளதால் அத்திட்டத்தை தமிழ்நாடு வழியாக செயல்படுத்துவதைக் கைவிட ஒன்றிய அரசிடம் வலியுறுத்தக் கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையிடம் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.

ஏற்கனவே  ஓசூரில் ஒரு சர்வதேச விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் அந்த திட்டத்தை முடக்க கர்நாடக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நிலைமை இப்படியிருக்க தமிழகத்திற்கு எந்த பலனும் இன்றி பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக நிலத்தை குறைந்த விலைக்கு கையகப்படுத்த தமிழ்நாட்டின் வழியாக 14 கிமீ்  இத்திட்டத்தை செயல்படுத்த நினைப்பது எந்த விதத்தில் நியாயம் இதனை அனுமதிக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்து வருகின்றன.

இத்திட்டத்துக்காக தமிழக எல்லையான ஓசூர் ஜூஜூவாடியிலிருந்து பாகலுார் அருகே தேவீரப்பள்ளி வரை 14 கி.மீ. துாரத்துக்கு நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக தமிழக பகுதியில் நிலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இறுதிக்கட்ட அளவீட்டு பணி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையிலிருந்து 2 கி்மீ் துாரத்தில் உள்ள கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி மற்றும் சர்ஜாபுரம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த அங்குள்ள நிலம் அளவீடு செய்யப்பட்டது. அங்கு நிலத்துக்கு இழப்பீடு தொகை அதிகம் கொடுக்க வேண்டும் என்பதால், தமிழக விளைநிலங்களைக் குறைந்த விலைக்கு எளிதாகக் கையகப்படுத்தலாம் என தமிழக எல்லைக்குள் இத்திட்டத்தை கொண்டு வருகின்றனர். இத்திட்டத்தால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. விவசாயிகள்தான் பாதிக்கப்படுவார்கள்.

எனவே, இத்திட்டத்துக்கு ஏற்கனவே அளவீடு செய்யப்பட்ட கர்நாடக மாநில நிலத்தின் வழியாக திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். தமிழகம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதியளிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Zemřely mi rybičky v akváriu : čím dezinfikovat ? – nejlepší tipy a triky. Worin unterscheidet sich business coaching vom life coaching ?. ✅ yes — local split screen is supported and.