சினிமா செய்திகள்
வெளிநாட்டு உரிமம் மட்டும் இத்தனை கோடியா? ‘பீஸ்ட்’ வியாபாரம் செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் ஏப்ரல் 13 அல்லது 14-ம் தேதி ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது ‘பீஸ்ட்’ படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை ஹம்சினி எண்டர்டெயிமெண்ட் என்ற நிறுவனம் ரூ.38 கோடிக்க்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது
தமிழ் திரைப்படம் ஒன்றின் வெளிநாட்டு உரிமையின் வியாபாரம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இதே நிறுவனம் தான் எதற்கும் துணிந்தவன் திரைபடத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து மற்ற மாநில உரிமைகள் தமிழக உரிமை வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் வியாபாரம் இந்திய திரையுலகின் சாதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.