சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
உலகநாயகன் கமலஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இது குறித்து கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகிய இருவரும் பதிவு செய்த டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
Nandri Aandavarey!🙏🏻
See you soon in Cinemas worldwide from June 3rd, 2022!#VikramFromJune3 #Ulaganayagan#KamalHaasan #VikramMakingGlimpse #Vikram https://t.co/NLcNSmfVVZ https://t.co/bDBnp2bAyn— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 14, 2022