Connect with us

கிரிக்கெட்

பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்தியா.. புரிந்த சாதனைகள் என்னென்ன?

Published

on

ஆசிய கோப்பை, கிரிக்கெட், இந்தியா, வெற்றி, பாகிஸ்தான், சாதனை, Asia Cup 2018, India, thrashed, Pakistan, records broken

ஆசிய கோப்பை 2018 கிரிக்கெட் தொடரின் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. அதில் இந்தியா பாகிஸ்தானை 9 விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியினைப் பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழந்து 237 ரன்கள் எடுத்து இருந்தது.

பின்னர் 238 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி விளையாடத் துவங்கிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிக்கர் தவான் மற்றும் ரோகித் ஷார்மா இருவரும் சதம் அடித்தனர்.

இந்நிலையில் இந்தப் போட்டியின் போது நடைபெற்ற சாதனைகள் பற்றி இங்குப் பார்க்கலாம். ரோகித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்துள்ளார். 181 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் ஷர்மா வேகமாக இந்த இலக்கினை எட்டியதில் 5 இடத்தினைப் பிடித்துள்ளார். ஆம்லா 150 போட்டிகளில் 7,000 ரன்களைக் கடந்து முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். இந்தியர்களுக்கு இடையில் வீராட் கோஹ்லி, கங்குலியை அடுத்து ரோகித் மூன்றாம் இடத்தினைப் பிடித்துள்ளார்.

ஆசிய கோப்பை போட்டிகளில் துவக்க ஆட்டக்கார்களாக இறங்கி 210 எடுத்த இரண்டாம் ஜோடி என்ற சாதனையினை ரோகித், தவான் கூட்டணி படைத்துள்ளது. இதற்கு முன்பு விராத் மற்றும் ரஹானே கூட்டணி 213 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.

ஒரு நாள் போட்டிகளில் சவுரவ் கங்குலி, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்ட்டுல்கரை அடுத்து அதிகச் செஞ்சுரி எடுத்த வீரராக ரோகித்(19) உள்ளார்.

நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 14 சதங்கள் அடித்துள்ள யுவராஜ் சிங்கை பின்னுக்குத் தள்ளி இடது கை பேட்ஸ்மேஙளில் இரண்டாம் அதிகச் சதம் அடித்த வீரராகத் தவான் சாதனை புரிந்துள்ளார்.

ஐசிசி சாம்ப்பியன்ஸ் ட்ரோப்பி, ஐசிசி உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பைகளில் குறைந்தது இரண்டு செஞ்சுரி அடித்த சாதனையும் தவான் செய்துள்ளார்.

ஆசிய கோப்பைகளில் ரோகித் – தவான் இணை 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. துவக்க ஆட்டக்கார்களாக இருவரும் 3,846 ரன்களை இந்திய அணிகளுக்காக அளித்துள்ளனர். 2013-ம் ஆண்டு 178 ரன்கள் பெற்றதே இவர்கள் இணையின் அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்தப் போட்டியில் 210 ரன் எடுத்துள்ளனர்.

தோணியை அடுத்து ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையும் ரோகித் ஷர்மாவிற்குக் கிடைத்துள்ளது. ரோகித் – தவான் இணை 13 வது முறையாகச் செஞ்சிரிகளை அடித்துள்ளனர். அதிகபட்சமாக 21 எனச் சச்சின் – கங்குலி இணை கூட்டணி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 வாரம் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 வாரம் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
ai tutorials. It is possible that a significant number of employees of the romanian car registry have issued certificates of authenticity for stolen vehicles, within the period provided by law. guest post privacy notice.