தமிழ்நாடு
நான் வேலை பார்த்த மாநிலத்தில் திமுக இருந்திருந்தா அங்கேயே முடிச்சிருப்பேன்: அண்ணாமலை

நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்த இடத்தில் திமுக இல்லை, ஒருவேளை இருந்திருந்தால் அங்கேயே திமுகவை முடித்து இருப்பேன் என்று அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அண்ணாமலை மேலும் கூறியதாவது: நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். ஒரு வேட்புமனு எப்படி தாக்கல் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய வேட்புமனுவில் குறை கண்டுபிடித்து எனக்கு எதிராக திமுகவினர் புகார் அளித்தனர்.
என் மீது வழக்கு இருப்பதாகவும் அதை நான் மறைத்து விட்டதாகவும் கூறினார்கள். என் மீது ஊழல் வழக்கு இருக்கிறதா? கொலை வழக்கு இருக்கிறதா? மாஸ் போடவில்லை என்றும் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகவும் இருந்த வழக்கை தான் திமுகவினர் கொண்டு வந்தனர்.
நான் ஐபிஎஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர். பல லட்சக்கணக்கான வழக்குகளை பதிவு செய்தவன். என் மீது வழக்கு இருக்கிறதா என்று திமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர். நான் வேலை பார்த்த இடத்தில் நல்லவேளை திமுக இல்லை, இருந்திருந்தால் ஒழித்துக்கட்டி இருப்பேன் என்று கூறினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















