சினிமா செய்திகள்
விஜய்சேதுபதியின் ‘அனபெல் சேதுபதி’: டிரைலர் வெளியீடு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ’லாபம்’ திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அவர் நடித்த இன்னொரு திரைப்படமான ’துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த இன்னொரு படமான ’அனபெல் சேதுபதி என்ற படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’அனபெல் சேதுபதி படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி தன்னுடைய காதலி டாப்ஸிக்காக பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை வாங்கி கொடுக்கிறார். அந்த அரண்மனையில் இருக்கின்ற அமானுஷ்ய சக்திகள் அந்த அரண்மனையில் இருப்பவர்களை என்ன செய்கிறது என்பதுதான் படத்தின் கதையாக இருக்கும்.
டாப்ஸி பேயா அல்லது அங்கு உள்ள அனைவருமே பேயா என்று நினைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை அம்சங்கள் கொண்ட இந்த படத்தின் டிரைலரே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் இந்த படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அரண்மனையில் உள்ள பிரமாண்டமான காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, டாப்ஸி, ஜெகபதி பாபு, ராதிகா, ஊர்வசி, யோகி பாபு, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். இந்த படம் செப்டம்பர் 17ம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.