டிவி
அனிதா சம்பத் தந்தை மரணம்..!- ரயில் பயணத்தின் நடுவே விபரீதம்!

பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்தின் தந்தை திடீர் மாரடைப்பால் காலமானார்.
சன் செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அனிதா சம்பத் தனக்குக் கிடைத்த பிக்பாஸ் வாய்ப்பின் மூலம் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரித்துக் கொண்டவர். சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த சூழலில் அனிதாவின் தந்தை சம்பத் மற்றும் அவரது தம்பி இருவர் மட்டும் சீரடி சென்றுவிட்டு ரயிலில் சென்னை திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளனர். ரயில் பயணத்தின் நடுவே அனிதாவின் தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மாரடைப்பினாலேயே சம்பத் காலமானார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட உள்ளது.

அனிதா பிக்பாஸ் வீட்டிலிருந்து திரும்பி இன்னும் இரண்டு நாட்களே ஆகின்றன. இந்த சூழலில் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தால் அவரது குடும்பத்தார் மிகுந்த துயரில் உள்ளனர். ரசிகர்கள் சமுக வலைதளங்கள் மூலம் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.















