வணிகம்
அமேசான் ஏர் சேவை இந்தியாவில் தொடக்கம்.. என்ன சிறப்பு தெரியுமா?

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், அமேசான் ஏர் சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அமேசான் ஏர் சேவை ஒரு விமான சரக்கு போக்குவரத்து சேவை நிறுவனம் ஆகும்.
இந்தியாவில் இந்த அமேசான் ஏர் சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் தங்களது இ-காமர்ஸ் ஆர்டர்களை இன்னும் வேகமாக அமேசான் நிறுவனம் டெலிவரி செய்யும்.

#image_title
முதற்கட்டமாகப் பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அமேசான் ஏர் சேவை வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் முக்கிய மெட்ரோ நகரங்களுக்கு இந்த அமேசான் ஏர் சரக்கு போக்குவரத்து சேவை மிகப் பெரிய பயனை வழங்கும்.
அமேசான் நிறுவனம் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியாவில் வழங்கி வந்த ஆன்லைன் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை நிறுத்தியது.

#image_title
அதே நேரம் தங்களது முக்கிய வணிகங்களான இ-காம்ர்ஸ், ப்ரைம் வீடியோ, ஆடியோ உள்ளிட்ட சேவைகளை மேம்படுத்தத் தொடர்ந்து முதலீடுகளைச் செய்து வருகிறது.
அண்மையில் அமேசான் நிறுவனத்திலிருந்து 25,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.