சினிமா செய்திகள்
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ ரிலீஸ் திடீர் தள்ளிவைப்பா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ திரைப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போகுமா என்ற தகவல் ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உண்டாக்கி உள்ளது.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்பட பலர் நடித்த திரைப்படம் ‘புஷ்பா’ திரைப்படம் டிசம்பர் 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘புஷ்பா’ படக்குழுவினர் சென்னை, திருவனந்தபுரம், மும்பை, ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் புரமோஷன் செய்தனர்.
இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலரில் இருந்து மிகப்பெரிய வெற்றி பெறும் என்று திரையுலகினர் கணித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘புஷ்பா’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று வரை தெலுங்கு தவிர மற்ற அனைத்து மொழிகளின் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திட்டமிட்டபடி தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ‘புஷ்பா’ ரிலீஸ் ஆகுமா அல்லது ஒரு சில நாட்கள் ரிலீஸ் தேதி தள்ளி போகுமா என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் நாளை திட்டமிட்டபடி தெலுங்கில் ‘புஷ்பா’ படம் ரிலீஸ் ஆகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படக்குழுவினர் தமிழ் மற்றும் இந்தி பதிப்பின் சென்சார் சான்றிதழ்களை இன்றுக்குள் வாங்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் இது குறித்த தகவல் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

















