சினிமா செய்திகள்
விஸ்வாசம் திரைப்படத்தின் 2வது பாடல் “வேட்டிக்கட்டு” வெளியானது!
Published
4 years agoon
By
seithichurul
அஜித், இயக்குநர் சிவா இருவரும் தொடர்ந்து 4வது முறையாக இணைந்துள்ள திரைப்படம் விஸ்வாசம். பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் 2வது பாடலான வேட்டிக்கட்டு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் முதல் பாடலான அடித்துத் தூக்கு சில வாரங்களுக்கு முன்பு வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாடல் வெளியாகியுள்ளது.
வேட்டிக் கட்டு என்ற இந்தப் பாடலை இமான் இசையில் ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார். அஜித் ஜோடியாக நயந்தாரா 4 வது முறையாக இணைந்துள்ளார். கிராமத்துப் பின்னி கதையாகப் படம் உருவாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார்.
படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் கிருஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பாக வெளியிட வாய்ப்புள்ளதாகப் படக்குழுவினரிடம் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
You may like
-
250 கோடி வசூல்! துணிவு படத்தை துரத்தி துரத்தி அடிக்கும் வாரிசு; போனி கபூர் அமைதியோ அமைதி!
-
நாயகியாகும் உலக அழகி, படப்பிடிப்புக்கு முன்பே பிசினஸ்: அஜித்தின் ‘ஏகே 62’ படத்தின் மாஸ் தகவல்கள்!
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!
-
துணிவு விமர்சனம்: கிளைமேக்ஸ் வரைக்கும் நல்லா தானே போச்சு; கடைசியில எச். வினோத்துக்கு என்ன ஆச்சு?
-
’துணிவு’: வங்கி கொள்ளையில் இவ்வளவு விஷயம் சொல்ல முடியுமா? அஜித்தை வைத்து மாஸ் செய்த எச் வினோத்!
-
சபரிமலை செல்லும் விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிக்கல்: அதிரடி உத்தரவு