Connect with us

இந்தியா

விமானம் விழுந்ததும் தீப்பிடித்ததும் – விமானிகள் கடைசி வரை போராடிய சோகக்கதையை நிபுணர்கள் வெளியிட்டனர்!

Published

on

அகமதாபாத் விமான விபத்தில் விமானிகள் கடைசி வரை போராடிய உண்மை வெளியானது – நிபுணர்கள் பகிர்ந்த முக்கிய தகவல்!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த பயணத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இதில், 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விமானத்தில் இருந்த முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவர்கள் கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபிசர் கிளைவ் குந்தர். கேப்டன் சுமீத்திற்கு 8,200 மணி நேரம் விமான ஓட்ட அனுபவமும், கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர அனுபவமும் இருந்தது. இவர்கள் இருவரும் விமானத்தை காப்பாற்ற கடைசி வரை போராடினர் என்ற உண்மை, தற்போது நிபுணர்கள் கூறிய தகவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தற்போது விசாரணையில் உள்ளது. ஆனால் விமானம் “ஸ்டால்” பிரச்சனையால் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ‘ஸ்டால்’ என்பது, விமானம் மேலே செல்ல தேவையான உந்துவிசை இல்லாமல், நேராக கீழே விழும் நிலையைக் குறிக்கும். விமானம் வானில் 625 அடி உயரத்தில் பறந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்துவிட்டது.

விமானம் விழுந்ததில், அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதியது. இதனால் தீப்பிடித்து கரும்புகை வானம் முழுக்க பரவியது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்தில் சிக்கிய விமானத்தின் வீடியோ வெளியாகி, விமானம் கீழே விழும் தருணத்தில் அதன் முன்பக்கம் மேலே நிமிர்ந்தது, இதனால் விமானிகள் மேலே ஏற முயற்சித்திருப்பது உறுதி என்று விமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது

Translate »
Pifteau henri biolinker.