தமிழ்நாடு
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

அதிமுக, முதல்வர் வேட்பாளர், முக்கிய அறிவிப்பு, ADMK, CM Candidate, Important Announcement
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில வாரங்களாக, தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையில் வார்த்தை போர் நடைபெற்று வருவதாகவும், இருவரும் பிடிக் கொடுக்காமல் பேசி வருவதாகவும் கூறப்பட்டு வந்தது. அதிமுக அமைச்சர்கள் பலர் ஓபிஎஸ்-ஐ சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அரசியல் வல்லுநர்களும், தற்போது உள்ள சூழலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது தான் சரி. ஆட்சியில் இருக்கும் போது வேறு முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகிறது. அதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கின்றனர்.




















