தமிழ்நாடு
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு.. அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

செம்பரம்பாக்கம் ஏரி தொடர் மழை காரணமாக முழு கொள்ளவை எட்டியது. அதே நேரம் நிவர் புயல் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
எனவே இன்று நண்பல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது. இதனால் சென்னை அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏரியைத் திறந்து விடும் போது மக்கள் யாரும் அடையாறு ஆறு மேம்பாலத்தில் நின்று புகைப்படம் எடுப்பது போன்றவற்றைத் தவிர்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் 2015-ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மக்கள் அருகில் நின்று புகைப்படம் எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிகளும் அரங்கேறி வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நிலவரத்தின் படி புயல், சென்னையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.



















