சினிமா செய்திகள்
‘நீங்க பேசியது பெரிய விஷயம்’- கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்..!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மோகன் லால் நன்றி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஸ்வின் சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 படத்தைப் பார்த்துவிட்டு அதுகுறித்தத் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 குறித்து அஸ்வின் கூறுகையில், “த்ரிஷ்யம் 2 கோர்ட் காட்சியில் ஜார்ஜ் குட்டி (மோகன் லால்) உருவாக்கிய ட்விஸ்ட் பார்த்து நான் சிரித்து ரசித்தேன். நீங்கள் பார்க்கைவில்லை என்றால் தயவு செய்து மீண்டும் முதலில் த்ரிஷ்யம் 1-ல் இருந்து பாருங்கள். அருமை! மிகவும் அருமை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
I laughed out loud when George Kutty @Mohanlal created that twist in the court #Drishyam2 . If you guys dint, please start all over again from #Drishyam1. Fabulous!! Just fabulous????????????????
— Ashwin ???????? (@ashwinravi99) February 21, 2021
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் மோகன்லால், “உங்களுடைய நெருக்கடியான கால சூழலில் நேரம் எடுத்து த்ரிஷ்யம் 2 பார்த்து அது குறித்து பேசியதற்கு நன்றி. எங்களுக்கு இது மிகப்பெரிய விஷயம். உங்களது முன்னேற்றத்துக்கும் என்னுடைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Thank you for taking time out of your busy schedule to watch our #Drishyam2 and talking about it. Means a lot to all of us .Best wishes for your career @ashwinravi99 https://t.co/kgMcfyOWwA
— Mohanlal (@Mohanlal) February 23, 2021
இதற்கு மீண்டும் அஸ்வின் “லாலேட்டன்’ எனப் பதிவிட்டு தனது ரசிகன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்.



















