இந்தியா
நடுக்கடலில் சிக்கிய இந்தியர்.. மூன்று நாடுகள் சேர்ந்து மீட்ட சுவாரசிய சம்பவம்!

சென்னை: நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை மீட்க மூன்று நாட்கள் பெரிய போராட்டமே நடந்து இருக்கிறது.
இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன் குளோப் ரேஸ் என்று அழைக்கப்படும் தனிநபர் ரேஸில் கலந்து கொண்டார். தனிநபர் படகு மூலம் கடலில் 30,000 நாட்டிக்கல் மைல்கள் செல்ல வேண்டும்.

கடலில் சிக்கிய இவரை மீட்க இந்திய கடற்படை, பிரான்ஸ் நாட்டு கடற்படை, மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை களமிறங்கியது. இவர் மீட்கப்பட்ட போது, படகிற்குள் இருந்துள்ளார்.
அப்போது பாதி சுயநினைவுடன் இருந்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் இருந்து கடலில் 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்துள்ளார்.





















