கிரிக்கெட்
கோலாகலமாக தொடங்கிய கடைசி டெஸ்ட்: பிரதமர் மோடியுடன் போட்டியை கண்டுகளித்த ஆஸ்திரேலியா பிரதமர்!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி இன்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது.

#image_title
முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வென்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இதன் மூலம் இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியை பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி கண்டுகளித்தார். முதல் அரை மணி நேர ஆட்டத்தை பார்த்துவிட்டு, இரண்டு பிரதமர்களும் மைதானத்தில் இருந்து புறப்பட்டனர்.

#image_title
இரண்டு பிரதமர்களின் வருகையையொட்டி மைதானத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களை கேப்டன் ரோகித் ஷர்மா பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். இதனையடுத்து பிரதமர் மோடி வீரர்களுக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணி வீரர்களுக்கு பிரதமர் அந்தோனி கைகொடுத்து உற்சாகப்படுத்தினார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. தற்போது உணவு இடைவேளைக்கு சென்றுள்ள அந்த அணி 75 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உஸ்மான் கவாஜா 27 ரன்னுடனும் கேப்டன் ஸ்மித் 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் முகமதி ஷமி மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.