ஆரோக்கியம்
ஆடி கிருத்திகை சிறப்புக்கு எளிய மற்றும் சுவையான பொட்டுக்கடலை பாயாசம் செய்வது எப்படி?
Published
10 மாதங்கள் agoon
By
Poovizhi
ஆடி மாதம் கிருத்திகை மற்றும் முதல் ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு!
ஆடி மாத கிருத்திகை மற்றும் முதல் ஞாயிறு நாளில் முருகனும், அம்பிகையும், குலதெய்வத்தையும் வழிபட பெரும் சிறப்பு உண்டு. இந்த நாளில் சாமிக்கு நிவேதனமாக எளிமையாக செய்யக்கூடிய பாயாசம் ஒன்றாக தான் பொட்டுக்கடலை பாயாசம். வீட்டிலேயே இருக்கும் சில பொருட்களைக் கொண்டு இந்த பாயாசத்தை சுவையாக செய்துவிடலாம்.
பொட்டுக்கடலை பாயாசம் செய்ய தேவையானவை:
பொட்டுக்கடலை – 1 கப்
நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் – 1½ கப் (சுவைக்கு ஏற்ப மாற்றலாம்)
நெய் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் – 2
தேங்காய் – 1 மூடி
முந்திரி – 5
திராட்சை – 8
செய்முறை:
முதலில் பொட்டுக்கடலையை வாசம் வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு பொடியாக அரைக்கவும்.
அரைத்த பொட்டுக்கடலைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய் மற்றும் ஏலக்காயை சேர்த்து அரைத்து, பால் எடுத்து வைக்கவும்.
முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அதில் பொட்டுக்கடலைக் கலவை சேர்த்து பச்சை வாசம் போனது வரை கிளறவும்.
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரையை சேர்த்து கரையும் வரை நன்றாக கிளற வேண்டும்.
பின் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலந்து விடவும். (தேங்காய் பாலை விரும்பாதவர்கள் பசும்பாலையும் பயன்படுத்தலாம்.)
கடைசியில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்தால், சுவையான பொட்டுக்கடலை பாயாசம் தயார்!
இந்த பாயாசத்தை ஆடி மாத முதல் ஞாயிறும், கிருத்திகை தினத்திலும் செய்து, விநாயகர், முருகன், அம்பிகை மற்றும் குலதெய்வத்துக்கு நிவேதனமாக வைத்து, குடும்பத்துடன் பகிர்ந்து உண்ணலாம்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




















