Connect with us

வணிகம்

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்..!

Published

on

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக பணம் அனுப்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

கடந்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் முறைக்கு டிசிஎஸ் என்ற வரி வசூல் செய்யப்படும் என்றும் அது 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த முன்மொழிந்தது என்பதையும் பலர் அறிந்ததே.
வெளிநாட்டு பயணங்கள், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாட்டுக்கு பணம் அனுப்புதல் மற்றும் கல்வி மருத்துவ நோக்கங்களுக்காக பணம் அனுப்புதல் ஆகிய நோக்கங்களுக்காக தவிர பிறவற்றிற்கு அனுப்பும் பணத்திற்கு இந்த வரி பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் பணம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகமாக இருந்தால் டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும். கல்வி கடனாக இல்லாமல் கல்விக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணம் 7 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் 5% டிசிஎஸ் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போதைய புதிய வடிவின்படி வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கைச் செலவுக்கு அதாவது கல்வி செலவு இல்லாமல் மற்ற செலவுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.

கடன் கல்விக்காக செய்யப்படும் செலவு உள்ளிட்ட வகைகளுக்குஅனுப்பப்படும் பணத்திற்கு டிசிஎஸ் வரி இல்லை என்றாலும் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளின் பிற செலவுக்காக அனுப்பப்படும் பணத்திற்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகள் வசதியாக விரும்பியவற்றை வாங்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் இங்கிருந்து பணம் அனுப்பி வருவது சகஜமான ஒன்றுதான். ஆனால் அந்த பணத்திற்கும் வரி கட்ட வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக அனுப்பப்படும் கல்வி கட்டணம், விடுதி செலவு ஆகியவற்றிற்காக இருந்தால் அதற்கு வரி கிடையாது. ஆனால் வெளிநாட்டில் ஆடம்பர அறைகளில் தங்குவது, அப்பார்ட்மெண்டில் தங்குவது மற்றும் பிற செலவுகள் ஆகியவை கல்விச்செலவுடன் வராது என்றும் எனவே அந்த செலவுகளுக்கு 20% டிசிஎஸ் வரி பொருந்தும் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புதிய விதி வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பதால் வெளிநாட்டில் படிக்கும் குழந்தைகளுக்கு பணம் அனுப்பும் பெற்றோர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா11 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்12 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா12 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா2 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா3 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா2 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized2 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
提供全面的 pos系統 解決方案,包括 銷售點系統 、 零售管理解決方案 、電子支付系統等。我們的商業管理軟體和 pos硬體 能夠幫助您實現業務的自動化、提升銷售效率和管理效能。與我們合作,您將獲得完整的 pos系統整合 ,以適應您的零售業務需求,實現更有效的庫存管理、客戶服務和支付運營。我們致力於提供高品質的pos解決方案,為您的零售業務帶來成功。.