இந்தியா
கேரளாவில் இனி நோ கனமழை.. வானிலை ஆய்வு மையம் நற்செய்தி
திருவனந்தபுரம்: கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளாவில் கடந்த 30 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால் அங்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது.
கேரளாவில் 50 வருட வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். கேரளா வெள்ளத்திற்கு 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நாளை மட்டும் லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்பின் படிப்படியாக வெள்ளம் குறையும். அதேபோல் மழையும் குறையும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதனால் மீட்பு பணிகள் விரைவாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுக்கு இந்த செய்து நிம்மதி அளித்துள்ளது.




















