சினிமா செய்திகள்
வலிய வந்து மாட்டி கொண்ட சுஹாசினி: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ஹிந்தி மொழி குறித்து பெருமையாக பேசி வலியவந்து சுகாசினி மாட்டிக் கொண்டதை அடுத்து அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது என்பதுவும் ஹிந்தி மொழியை கற்க வற்புறுத்தினால் தமிழகத்திலிருந்து பெரும் கொந்தளிப்பு எழும் என்று தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஹிந்தி மொழியை இணைப்பு மொழியாக அனைத்து மாநிலங்களும் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு தென்னிந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தது என்பது அதேபோல் ஹிந்தி தான் தேசிய மொழி என்று கூறிய அஜய்தேவ்கானை தமிழ் திரைப்பட உலகினர் வறுத்தெடுத்தன என்பதும் தெரிந்ததே .
இந்த நிலையில் இந்தி மொழி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை நடிகையும் மணிரத்னம் மனையுமான சுஹாசினி தெரிவித்துள்ளார். அதில் மக்கள் அனைவரும் இந்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த சர்ச்சை கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.




















