தமிழ்நாடு
சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு வேலைநாள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

வரும் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் ஆனால் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கொரோனாவைரஸ் முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை, காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சமீபத்தில் பள்லிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாட்கள் என்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மார்ச் 19ஆம் தேதி சனிக்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்றும் ஆனால் அதே நேரத்தில் மார்ச் 20ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
மார்ச் 20ஆம் தேதி ஞாயிறன்று மேலாண்மை குழு கூட்டம் மற்றும் பெற்றோர் கூட்டம் நடைபெறும் என்றும் இந்தக் கூட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது


















