சினிமா செய்திகள்
புத்தாண்டில் நிச்சயம் செய்து கொண்ட எமி ஜாக்சன்!

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன், இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயோட்டாவுடன் நிச்சயம் செய்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது காதலருடன் லிப் லாக் முத்தமழையில் கிறிஸ்துமஸை கொண்டாடிய நடிகை எமி ஜாக்சன், தற்போது புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்துள்ளதை வெளிப்படுத்தும் விதமாக வைர மோதிரத்துடன் புது வாழ்க்கை தொடங்கியுள்ளது என இன்ஸ்டாகிராமில் நேற்று வெளியிட்ட புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு விடுமுறையை ஜாம்பியா நாட்டில் உள்ள தெற்கு மாகாணத்தில் காதலனுடன் கொண்டாடி வரும் சூப்பர் கேர்ள் நடிகை எமி ஜாக்சன், இன்ஸ்டாகிராமில் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.


















