இந்தியா
நடிகை செளகார் ஜானகி உள்பட 50 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருது!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்பட 50 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
எம்ஜிஆர், சிவாஜி உட்பட பல முன்னணி பிரபலங்களுடன் நடித்தவர் செளகார் ஜானகி என்பதும் இவர் சமீபத்தில் கூட ஒரு திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியன் உள்பட 7 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இலக்கியம், கல்வி ஆகியவற்றுக்காக எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சமூக சேவை பணிகளுக்காக தாமோதரன் அவர்களுக்கும், கலைத்துறையின் சார்பில் பல்லேஷ் பஜாந்திரி அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவதுறைக்காக வீராசாமி சேஷைய்யாவுக்கு பத்மஸ்ரீ விருதும், தேவதாசி மரபின் கடைசி வாரிசாக கருதப்படும் சதிராட்ட கலைஞரான தமிழகத்தைச் சேர்ந்த 80 வயது முத்து கண்ணம்மாள் அவர்களுக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த ஏழு பேர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.







