சினிமா செய்திகள்
அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ் தேதி மாற்றமா?

அருண் விஜய் நடித்த ‘பார்டர்’ என்ற திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருண்விஜய் நடித்த ‘பார்டர்’ திரைப்படம் நவம்பர் 19ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்ட ஒரு சில நாட்களில் 12 ஆம் தேதி ‘பார்டர்’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள மற்றொரு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த வாரங்களில் ஒரே தலைப்பில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் குழப்பம் அடைவார்கள் என்பதால் அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி தற்போது கனமழை பெய்து வருவதால் திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருவது குறைந்துள்ளதாகவும் புரமோஷன் பணிகளும் மழை காரணமாக செய்ய முடியாமல் இருப்பதாகவும் ‘பார்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அருண் விஜய்யின் ‘பார்டர்’ திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அருண் விஜய் ஜோடியாக ரெஜினா நடித்துள்ள இந்த படத்தை அறிவழகன் இயக்கி உள்ளார் என்பதும் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















