தமிழ்நாடு
மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை: ரூ.101ஐ தொட்டது டீசல்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை 105 ரூபாய் நெருங்கி விட்டது என்பதும் அதேபோல் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும் சிக்கலில் உள்ளார்கள் என்பதும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.83 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டீசல் விலை இன்று ஒரே நாளில் 33 காசுக்ள் அதிகரித்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் ரூ.100.92 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105ம், டீசல் விலை ரூ.101ம் என விற்பனையாகி வரும் வாகன ஓட்டிகளை பெரும் கலக்கத்தை உண்டாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















