Connect with us

இந்தியா

ஜொமைட்டோவில் இருந்து விலகிய இணை நிறுவனர்: புதிய பாதையில் பயணிக்க போவதாக அறிவிப்பு!

Published

on

பிரபல ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான ஜொமைட்டோ நிறுவனத்தின் இணை இயக்குனர் கவுரவ் குப்தா திடீரென பதவி விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனங்களின் முன்னணி நிறுவனங்களில் ஒன்று ஜொமைட்டோ என்பது தெரிந்ததே. இந்த நிறுவனத்தில் கவுரவ் குப்தா என்பவர் கடந்த 2015-ஆம் ஆண்டு இணைந்தார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு சிஇஓவாக பதவி உயர்வு பெற்றார் என்பதும், அதனையடுத்து ஒரே ஆண்டில் அதாவது 2019 ஆம் ஆண்டில் இணை நிறுவனராக அறிவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது காலத்தில்தான் ஜொமைட்டோ நிறுவனம் மளிகைப் பொருள்கள் மற்றும் மருந்து பொருட்களை டெலிவரி செய்யும் பணியை தொடங்கியது என்பதும், ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி வெளிநாடுகளில் ஜொமைட்டோ நிறுவனத்தை விரிவுபடுத்த அவர் மேற்கொண்ட முயற்சியும் பலன் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் நிறுவனத்தின் இணை நிறுவனர் கவுரவ் குப்தா மற்றும் மற்றொரு இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் ஆகிய இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக விரைவில் கவுரவ் குப்தா ஜொமைட்டோவில் இருந்து வெளியே வருவார் என்று கூறப்பட்டது. அதன்படி தற்போது அவர் வெளியேறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது அலுவலக நிர்வாகிகளுக்கு அனுப்பிய இமெயிலில் ஜொமைட்டோவில் ஆறாண்டு பணியாற்றிய தனது அனுபவம் மறக்க முடியாதது என்றும் இந்நிறுவனத்தை முன்னேற்ற நல்லதொரு பாதையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் இருப்பினும் தன்னால் இந்த நிறுவனத்தில் தொடரமுடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது பயணத்தில் வேறு ஒரு புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் இதை எழுதும்போதே நான் மிகுந்த உணர்ச்சி பெருக்கோடு உள்ளேன் என்றும் அதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜொமைட்டோவின் இணை இயக்குனர் கவுரவ் குப்தா விலகலை அடுத்து மற்றொரு இணை நிறுவனர் தீபிந்தர் கோயல், தனது டுவிட்டரில் கூறியபோது நம்முன் இன்னும் பெரிய பயணம் காத்துக் கொண்டிருக்கின்றது என்றும், நமக்கு நல்ல அணி, தலைமைப்பண்பு, முன்னோக்கி செல்லும் திறமை இருக்கிறது என்றும் நமது பயணத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Free Bio Link Page with DR68 Power Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR.