இந்தியா
பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

புதிய வாகனங்களுக்கு பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் திட்டம் குறித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வாகனங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பம்பர் டு பம்பர் என்ற இன்சூரன்ஸ் அறிமுகமானது. இதனை அடுத்து விற்பனையாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்றில் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்தபோது பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது மேலும் நடைபெற்று வந்த நிலையில் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு என்ற உத்தரவை அமல்படுத்த தங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என வாகன விற்பனையாளர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த விதி காரணமாக இன்சூரன்ஸ் தொகையும் அதிகமாக உள்ளதாக வாகன உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
ஆனால் அதே நேரத்தில் இந்த விதி அமலுக்கு வந்தால் வாகன உரிமையாளர், டிரைவர், பயணி மற்றும் பயணியோடு பயணிப்பவர் என அனைவரும் இன்சூரன்ஸ் கீழ் வருவார்கள் என்றும் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தாமதம் இன்றி இழப்பீடு கிடைக்கும் என்றும் இந்த விதி கூறியது.
இருப்பினும் இந்த விதியை அமல்படுத்துவதில் சில குழப்பங்கள் இருப்பதால் சமீபத்தில் சென்னை ஐகோர்ட் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நிலையில் தற்போது இந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக சென்னை ஐகோர்ட் அறிவித்துள்ளது. எனவே பம்பர் டு பம்பர் இன்சூரன்ஸ் இனி இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














