தமிழ்நாடு
தமிழக அரசு மீது வழக்கு தொடர்ந்த நடிகர் மம்முட்டி: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நடிகர் மம்முட்டிக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என தமிழக அரசு அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்த நிலையில் இது குறித்து பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் என்ற கிராமத்தில் நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலம் என கடந்த மார்ச் மாதம் நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் மம்முட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் இந்த நிலம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட்டு இருந்தது
இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை செப்டம்பர் 27 ஆம் தேதி தள்ளி வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்
தமிழக அரசு மீது நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


















