தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் வழங்கிய ரூ.10 லட்சத்தை திருப்பி கொடுத்த சங்கரய்யா!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ரூபாய் 10 லட்சம் மற்றும் விருது ஆகியவற்றில் விருதை மட்டும் வைத்துக் கொண்டு 10 லட்சத்தை அவரிடமே முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா திருப்பிக் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமான சங்ககாராவுக்கு சமீபத்தில் தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த விருதை இன்று அவருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சங்கராவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு தகைசால் தமிழர் விருது மற்றும் அந்த விருதுக்குரிய ரூபாய் 10 லட்சம் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த நிலையில் விருதை மிகவும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட சங்கரய்யா அவர்கள், முதல்வர் ஸ்டாலின் வழங்கிய ரூபாய் 10 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடமே திருப்பிக் கொடுத்தார். முதலமைச்சர் நிவாரண நிதிக்காக அந்த பணத்தை அவர் வருவதாக குறிப்பிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான சங்கரய்யா அவர்கள் சமீபத்தில்தான் தனது 100வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அப்போதும், முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் என்பதும் தெரிந்தது.


















