பிற விளையாட்டுகள்
வட்டு எறிதல் இறுதிப்போட்டியில் திடீர் சிக்கல்: கமல்ப்ரீத் கவுர் பதக்கம் வெல்வாரா?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் பெற்றுத் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் அவர்களுக்கு திடீர் சிக்கல் எழுந்துள்ளது
தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் பெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, பளூதூக்கும் போட்டியில் மீராபாய் சானு பெற்ற வெள்ளி மற்றும் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து பெற்றுக்கொடுத்த வெண்கலம் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இந்தியாவுக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, இந்திய பெண்கள் ஆக்கி அணி, வட்டு எறிதல் வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் ஆகியோர் இந்தியாவுக்கு பதக்கம் பெற்று கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன்னர் வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் இந்தியாவில் கமல்ப்ரீத் கவுர் 61.62 புள்ளிகள் எடுத்தார். இரண்டாவது முறை அவர் வீசிய போது அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் மூன்றாவது வாய்ப்பு அவருக்கு கிடைத்தது
இந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்த போட்டி சில மணி நேரம் கழித்து அல்லது நாளை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறை இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் தனது திறமையை நிரூபித்தால் நிச்சயம் அவருக்கு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
இதுவரை நடந்த போட்டியில் அமெரிக்கா, கியூபா மற்றும் ஜெர்மனி வீராங்கனைகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர் என்பதும் இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் ஏழாவது இடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


