கிரிக்கெட்
டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சு தேர்வு: சிஎஸ்கேவுக்கு தொடர் வெற்றி கிடைக்குமா

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 27வது போட்டியான இன்று சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது
இந்த டாஸில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா வென்ற நிலையில் அவர் சற்றும் யோசிக்காமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியை பொறுத்தவரை மும்பை அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி தொடர்ந்து நான்காவது இடத்தில் தான் இருக்கும் என்பதும் அதேபோல் சென்னை அணி வெற்றி பெற்றாலும் அந்த அணி தொடர்ந்து முதலிடத்தில் தான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இன்றைய போட்டியின் முடிவு புள்ளி பட்டியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்கள் பின்வருமாறு:
சென்னை அணி: சென்னை அணி: ருத்ராஜ், டூபிளஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, சாம் கர்ரன், நிகிடி, ஷர்தூல் தாக்கூர், தீபக் சஹார்
மும்பை அணி: டீகாக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ஜிம்மி நீஷம், ராகுல் சஹார், தவால் துல்கர்னி, பும்ரா, டிரெண்ட் போல்ட்
#MumbaiIndians have won the toss and they will bowl first against #CSK.
Follow the game here – https://t.co/NQjEDM2zGX #MIvCSK #VIVOIPL pic.twitter.com/4Dhook7aH7
— IndianPremierLeague (@IPL) May 1, 2021








