இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிறது என்பதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர்களுக்கு தினமும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும் அதில் பாதிக்குமேல் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் பரவி வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சற்று முன் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு கொரோனா பாதிப்பு என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 37,028 பேருக்கு கொரோனா வைரஸ் குணமாகி உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் டிஸ்டார்ஜ் செய்யப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 271 பேர் கொரோனாவால் பலியானதை அடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 114 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 6.11 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செல்லப்பட்டுள்ளதாகவும் இன்னும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் நிலவரம் இப்படி என்றால் உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 128,227,172 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2,803,969
பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 103,430,931 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


















