தமிழ்நாடு
தொகுதிகள் கேட்காமலேயே அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ள 13 கட்சிகள்!

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர என்பதும் தேமுதிக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொகுதி உடன்பாடுகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு 13 கட்சிகள் எந்தவித தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் இன்றி நிபந்தனையின்றி ஆதரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து உள்ள கட்சிகளின் பெயர்கள் பின்வருமாறு:
நடிகர் கார்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சி, ஏசி சண்முகம் அவர்களின் புதிய நீதிக்கட்சி, தனபாலன் அவர்களின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, சேதுராமன் அவர்களின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழக கட்சி, ஜோதி முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பசும்பொன் தேசிய கழகம், முருகன் ஜி அவர்களின் பார்வார்டு பிளாக் கட்சி, வேட்டவலம் மணிகண்டன் அவர்களின் இந்திய உழைப்பாளர் உழைப்பாளர் கட்சி, ஷேக் அப்துல்லாவின் தமிழ் மாநில முஸ்லீம் லீக் மற்றும் அம்பேத்கர் பிரியன் அவர்களின் இந்திய தேசிய குடியுரிமை கட்சி ஆகிய கட்சிகள் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.





















