தமிழ்நாடு
கமல் கட்சிக்கு வீதிதோறும் பிரசாரம் செய்யும் ‘தளபதி’ விஜய் பட நடிகை..!- வீடியோ

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக விஜய் பட நடிகை ஒருவர் வீதிதோறும் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்குவதை ஒட்டி கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யத்துக்காகப் பிரசாரப் பணிகளைத் தொடங்கி உள்ளார். இடையில் காலில் அறுவை சிகிச்சையை முடித்தவர் தற்போது சிறிய ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் கட்சிப் பணிகளைத் தொடருவார் எனத் தெரிகிறது.
அரசியல் கட்சிகள் தேர்தல்களின் போது வழக்கமாக நடிகர்கள், நடிகைகளை பிரசாரத்துக்கு அழைப்பது வழக்கம். ஆனால், தளபதி பட நடிகை ஒருவர் தானே முன் வந்து கட்சியில் இணைந்து வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். அவர் கில்லி படப் புகழ் ஜெனிஃபர். நடிகை ஜெனிஃபர் தளபதி விஜய்-ன் கில்லி படத்தில் விஜய்-க்கு தங்கையாக நடித்திருப்பார்.
விருகம்பாக்கம் தொகுதியில் வீடு வீடாக பிரசாரத்தின் போது நடிகை ஜெனிபர் நம்மவருக்கு ஆதரவு தெரிவித்த போது @ikamalhaasan @drmahendran_r @nasser_kameela @maiamofficial pic.twitter.com/fO3ROpvjVG
— Shanmugasundaram (@Shanmugam_Mnm) February 7, 2021
தற்போது டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் சின்னத்திரை நடிகையாகவும் உள்ளார். இவர் விருகம்பாக்கம் பகுதிகளில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகிறார். இந்த வீடியோவை மக்கள் நீதி மய்யத்தினரும் கமல் ரசிகர்களும் வைரல் ஆக்கி வருகின்றனர்.


















