கிரிக்கெட்
தன் செல்லக்குட்டி வாமிகாவின் முதல் படத்துக்கு அப்பா விராட் கோலியின் ரியாக்ஷன் இதுதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் அவரது மனைவியும் பாலிவுட்டின் முன்னணி நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவுக்கும் சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முதல் புகைப்படத்தை நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த அனுஷ்கா, வாமிகா என்று குழந்தைக்குப் பெயர் சூட்டியுள்ள தகவலையும் வெளியிட்டார்.
வாமிகாவின் முதல் படத்தைப் பகிர்ந்த அனுஷ்கா, ‘நாங்கள் இருவரும் காதல், ஒருவருக்காக இன்னொருவர் எனவும், நன்றியுணர்வுடனும் இணைந்து வாழ்ந்தோம். ஆனால், இந்தச் செல்லக்குட்டி வாமிகா, அதை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்று விட்டது.
View this post on Instagram
அழுகை, சிரிப்பு, கவலை, பேரானந்தம் என எல்லாம் இவளால் ஒரு சில நிமிடங்களில் அனுபவிக்கிறோம். தூக்கம் என்பது மிகக் குறைவாகத் தான் கிடைக்கிறது. ஆனால், எங்கள் இதயம் நிரம்பி வழிகிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் நல்ல எனர்ஜிக்கு நன்றிகள்’ எனப் பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பல்வேறு பிரபலங்கள் கீழே, வாழ்த்து கமென்டுகளையும், இதய இமோஜிக்களையும் பதிவிட்டனர்.

விராட் கோலியும் கீழே வந்து, தன் மனதில் இருக்கும் விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்தார். அவர், ‘எனது மொத்த வாழ்க்கையும் ஒரே ஃபிரேமில் உள்ளது’ எனப் பதிவிட்டு இதய இமோஜியை முடிவில் போட்டிருந்தார்.
அனுஷ்கா ஷர்மாவின் போஸ்டுக்குக் கிடைப்பதைப் போல, கோலியின் கமென்டுக்கும் லைக்ஸுகள் குவிந்து வருகின்றன.


















