சினிமா செய்திகள்
2 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட சாய் பல்லவி?
மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்ட படம் அய்யப்பனும் கோஷியும்.

அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை சாய் பல்லவி 2 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்ட படம் அய்யப்பனும் கோஷியும். கேரளாவில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து தற்போது அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் பவன் கல்யாணின் மனைவியாக நடிக்கிறார். அவருக்கு மனைவியாக போராளி வேடத்தில் நாயகி தேவைப்படுகிறார். இந்த போராளி பெண் வேடத்தில் நடிப்பதற்கு சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகினர். அதற்கு சாய் பல்லவி 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் சாய் பல்லவி கேட்ட சம்பளத்தை கொடுத்து அவரையே ஒப்பந்தம் செய்துகொள்ளலாமா, அல்லது வேறொரு நாயகியை தேடலாமா என்ற குழப்பத்தில் உள்ளனர்.





















