சினிமா செய்திகள்
எனிமி பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! விஷால் – ஆர்யா இருவரும் செம்ம கலாய்!

விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் சக்ரா, துப்பறிவாளன் படங்களில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே பெயர் வைக்கப்படாத படம் ஒன்றிலும் ஒப்பந்தமானார். இந்தப் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார். இந்த நிலையில், அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் ‘எனிமி’ ஆகும்.
நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் எனிமி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, ஆர்யாவையும் அதில் டேக் செய்துள்ளார். அதில், ஆர்யாவிடம், அன்புள்ள எதிரிக்கு, இனி நீ தான் என் நண்பன் இல்லை. 22 ஆம் தேதி உன் முகத்தில் முதல் பஞ்ச் வைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நடிகர் ஆர்யாவும் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், டேய் முதலில் நீ சூட்டிற்கு வாடா என்று நக்கலாக பதிலளித்துள்ளார். எனிமி படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
முன்னதாக விஷால் ஆர்யா இருவரும் ஏற்கெனவே அவன் இவன் படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். இன்று வரையில் அதே கலாய் மெயிண்டேன் பண்ணி கொண்டு இருப்பது ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.


















