உலகம்
அதிர்ச்சி.. காற்று மாசு காரணமாக இறந்த 1.16 லட்சம் குழந்தைகள்!

2019-ம் ஆண்டு காற்று மாசு காரணமாக 1 லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டேட் ஆப் குளோபல் ஏர் என்ற பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், காற்று மாசுவால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் எடை குறைவானதாக உள்ளன.
காற்று மாசுவால் பக்கவாதம், நீரிழிவு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளுடன் குழந்தைகள் பிறப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 2019-ம் ஆண்டு காற்று மாசுவால் 16 லட்சம் குழந்தைகள் இறந்துள்ளதாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுவால் 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் 6 கோடியே 67 லட்சம் நபர்கள் இறந்துள்ளனர்.
அதிலும் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















