இந்தியா
உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீடு திட்டத்தைத் துவக்கி வைத்தார் மோடி!
2018-2019 நிதி ஆண்டின் பட்ஜெட் அறிவிப்பில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு திட்டத்தினை அளிப்பதாகத் தெரிவித்து இருந்தார்.
இந்தியாவின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற பெயரில் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. ராஞ்சியில் இருந்து பிரதமர் மோடி அவர்கள் 10 மருத்துவ மையங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்களில் இந்தத் திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்.

மோடியின் மருத்துவக் காப்பீடு திட்டம் 10 கோடி குடும்பங்களில் இருந்து 50 கோடி நபர்களுக்குப் பயனளிக்க உள்ளது. இது ஐரோப்பிய யூனியன் மொத்த மக்கள் தொகையினை விடவும், அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளின் மக்கள் தொகையினை விடவும் அதிகமாகும்.
இதயம், கல்லீரல், புற்றுநோய், காசநோய் உடப்ட 13,000 நோய்களுக்கு 13,000 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் என இந்த மருத்துவக் கப்பீடு திட்டம் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.
மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு திட்ட சேவைக்காக நாடு முழுவதும் 3 லட்சம் பொதுச் சேவை மையங்களையும் அமைக்க உள்ளனர். முக்கிய மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்திற்காகத் தன்னார்வளர்களும் இருப்பார்கள்.
இவை மட்டும் இல்லாமல் இந்தியாவின் 2-ம் மற்றும் 3-ம் தர நகரங்களில் 2,500 புதிய மார்டன் மருத்துவமனைகள் மற்றும் 15 புதிய ஏயிம்ஸ் மருத்துவமனைகளைக் கட்டவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 3 முதல் 4 தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரிகளும் கட்டப்பட உள்ளது.





















