இந்தியா
பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு?

பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்ல தகுதியான நபர், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் அது வரலாற்று சிறப்பமிக்க தருணமாக அமையும் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

#image_title
உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று நோபல் பரிசு. அறிவியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி என பல்வேறு பிரிவுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். இந்நிலையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் ஆஷ்லே டோஜே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தகுதியான நபர். உலகில் உள்ள அமைதியின் மிகவும் நம்பகமான முகமாக மோடி இருக்கிறார். போரை தடுத்து அமைதியை நிலைநாட்டும் திறன் கொண்டவர் அவர். நான் மோடியின் மிகப்பெரிய ரசிகன்.
உலகநாடுகள் இந்தியாவிடம் இருந்து அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மோடி செயல்படுத்தும் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருகிறது. பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாக இருக்கும் என்றார். இதனால் பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.