இந்தியா
பெங்களூருவில் தனியார் மருத்துவமனை லைசென்ஸ் ரத்து.. ஏன்? எதற்கு? எப்படி?

கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில், கொரொனா ஊழியர் குறித்த தகவலை அளிக்காததால், மருத்துவமனையின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள வேனு ஹெல்த் கேர் மருத்துவமனையில், சென்ற 18-ம் தேதி கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்காக ஒருவர் வந்துள்ளார்.
கொரோனா அறிகுறியுடன் ஒருவர் சிகிச்சைக்கு வரும் போது, நோயாளி பற்றிய விவரத்தை மருத்துவமனை நிர்வாக சுகாதரத் துறைக்கு தெரியப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அதை செய்ய மருத்துவமனை தவிரவிட்டது.
அதுமட்டுமல்லாமல், அந்த நபருக்கு ஒரு நாள் முழுவதும் சிகிச்சை அளித்ததைவிட்டு வேறு மருத்துவமனைக்கு மேல் மாற்றியுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே நோயாளி குறித்த விவரத்தைச் சுகாதாரத் துறைக்குத் தெரிவிக்காத காரணத்தால் மருத்துவமனை மீது சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.







