இந்தியா
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து சஸ்பென்ஸ்.. நாளை மோடி அறிவிக்க வாய்ப்பு!

கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், பல மாநில அரசுகள் தாங்களாகவே ஊரடங்கை நீட்டித்துள்ளனர்.
சில மாநிலங்கள் பிரதமர் மோடியிடம் ஊரடங்கை நீட்டிப்பதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஊரடங்கு குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ள, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வரதன், “ஊரடங்கு என்பது சமூக ரீதியான தடுப்பு மருந்து போன்றது.
நாளை மாலை 5 மணிக்கு, மக்களிடையில் உரையாற்றும் மோடி, ஊரடங்கை 3 வாரங்கள் வரை நீட்டிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஊரடங்கு நீட்டிப்பிலும், போக்குவரத்து சேவைகள் இருக்காது என்று கூறப்படுகிறது. கல்வி நிறுவனங்களும் இயங்காது. சரக்கு போக்குவரத்து மட்டும் இருக்கக் கூடிய அறிவிப்பாக அது இருக்கலாம் என்று கூறப்படுகிறது.


















