வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தொழில் முதலிட்டூக் கழகத்தில் வேலை!

தமிழக அரசு நிறுவனமும் மற்றும் இந்தியாவின் முதன்மையான மாநில அளவிலான நிதி நிறுவனமுமான தமிழ்நாடு தொழில் முதலிட்டூக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள மேலாளர், முதுநிலை அலுவலர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்: 39
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: மேலாளர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 05
வேலை: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 04
மாத சம்பளம்: ரூ.56,900 – 1,80,500
வேலை: முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)
காலியிடங்கள்: 10
வேலை: முதுநிலை அலுவலர் (நிதி)
காலியிடங்கள்: 20
மாத சம்பளம்: ரூ.56,100 – 1,77,500
வயது: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், பிசி, எம்பிசி, டிசி மற்றும் பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 32க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், சிஏ, ஐசிடபுள்ஏ மற்றும் நிதியியல் பிரிவில் எம்பிஏ, எம்.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறைந்தபட்சம் 3 மற்றும் 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி, டிஏபீ பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800 + 18 சதவீதம் ஜிஎஸ்டி, மற்ற பிரிவினர் ரூ.400 + 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.tiic.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிய http://www.tiic.org/Recruitment_Notification_2019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2019. தேர்வு மையம் குறித்த தகவல் பதிவிறக்கம் செய்யப்படும் நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 05.12.2019
















